கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
தேனி : அல்லிநகரம் தெற்குத்தெரு செந்தில்குமார் மனைவி பாரதி 43. டீக்கடை உரிமையாளர். அல்லிநகரம் வெங்கலாநகரை சேர்ந்த தங்கராஜா 31, இக் கடைக்கு டீ குடிக்க வருவது வழக்கம். பிப்.14ல் பாரதி கடையில் இருந்த போது, டீ சாப்பிட்டு முடிந்தும், நீண்ட நேரம் கடையிலேயே தங்கராஜா அமர்ந்திருந்தார்.
இதனால் பாரதி, டீ சாப்பிட்டால் வீட்டிற்கு புறப்படுங்கள் என்றார். அதற்கு தங்கராஜா, தகாத வார்த்தைகளால் திட்டி, பாரதியின் கைகளை பிடித்து நீ வெளியே போ என தெரிவித்துள்ளார். உடனடியாக பாரதியின் கணவர் செந்தில்குமார், அருகில் இருந்த கார்த்திக் இணைந்து தங்கராஜாவை கண்டித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்தவர், கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார். பெண் புகாரில், தங்கராஜா மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் வழக்குப் பதிந்து அல்லிநகரம் போலீசார் தங்கராஜாவை கைது செய்தார்.
மேலும்
-
மஹாராஷ்டிரா துணை முதல்வர் ஷிண்டேவுக்கு கொலை மிரட்டல்
-
ஏ.டி.எம்.,மில் எரிந்த நோட்டு பணம் எடுத்தவருக்கு அதிர்ச்சி
-
கிணற்றில் விழுந்த சிறுத்தை கூண்டு வைத்து பத்திரமாக மீட்பு
-
தீப்பிடித்த ஆம்னி பஸ் 26 பேர் உயிர் தப்பினர்
-
மின் இணைப்பு இல்லாமல் வீணாகி வரும் வி.ஏ.ஓ., அலுவலகம்
-
ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் மறியலுக்கு அனுமதி மறுப்பு