டாக்டர் பாலியல் பலாத்காரம்; சிறுவனுக்கு 20 ஆண்டு சிறை
திருவண்ணாமலை: வேலுாரில், பெண் டாக்டர் பாலியல் பலாத்கார வழக்கில், சிறுவனுக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
வேலுார், சி.எம்.சி., மருத்துவமனையில் பணிபுரிந்த பீஹாரை சேர்ந்த பெண் டாக்டர் மற்றும் நாக்பூரை சேர்ந்த ஆண் டாக்டர் இருவரும், கடந்த, 2022 மார்ச், 16ல், இரவு, வேலுாரிலிருந்து காட்பாடிக்கு சென்றபோது, 5 பேர் கொண்ட கும்பல் ஆட்டோவில் கடத்தி, பெண் டாக்டரை பாலியல் பலாத்காரம் செய்து, 40,000 ரூபாய், 2 பவுன் நகை, மொபைல்போன் கொள்ளையடித்து சென்றது.
இதில், 17 வயது சிறுவன் உட்பட, 5 பேரை வேலுார் வடக்கு போலீசார் கைது செய்தனர். இதில், 4 பேருக்கு கடந்த, ஜன., 30ல், வேலுார் மகளிர் நீதிமன்றத்தில், 20 ஆண்டு சிறை தண்டனை, தலா, 25,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது. சிறுவன் குறித்த வழக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சிவக்குமார் நேற்று, 17 வயது சிறுவனுக்கு, 20 ஆண்டு சிறை, 23,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
மேலும்
-
மஹாராஷ்டிரா துணை முதல்வர் ஷிண்டேவுக்கு கொலை மிரட்டல்
-
ஏ.டி.எம்.,மில் எரிந்த நோட்டு பணம் எடுத்தவருக்கு அதிர்ச்சி
-
கிணற்றில் விழுந்த சிறுத்தை கூண்டு வைத்து பத்திரமாக மீட்பு
-
தீப்பிடித்த ஆம்னி பஸ் 26 பேர் உயிர் தப்பினர்
-
மின் இணைப்பு இல்லாமல் வீணாகி வரும் வி.ஏ.ஓ., அலுவலகம்
-
ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் மறியலுக்கு அனுமதி மறுப்பு