பெண்ணை கொன்ற மகன்கள்; கணவருக்கும் 'காப்பு'
பெத்தநாயக்கன்பாளையம்: சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம், மேட்டுடையார்பாளையத்தை சேர்ந்த கொத்தனார் பொன்னுவேல், 43. இவரது மனைவி வசந்தி, 40. இவர்களது மகன் கவின், 21, மற்றொரு மகன், 17 வயது சிறுவன்.
கூலி வேலைக்கு சென்ற வசந்தி, அவருடன் பணிபுரியும் ஒருவருடன் மொபைல் போனில் பேசி வந்தார். இதனால் அவரது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு, நேற்று முன்தினம் அவரது மகன்கள், கணவர் சேர்ந்து, வசந்தியிடம் கேட்டு வாக்குவாதம் செய்தனர்.
அப்போது ஆத்திரமடைந்த இரு மகன்களும், வசந்தியை தாக்கினர். வசந்தி உயிரிழந்தார். ஏத்தாப்பூர் போலீசார் விசாரித்து, அவரது இரு மகன்களையும் கைது செய்தனர். விசாரணையில், கணவரும் தாக்கியது தெரிந்தது. இதனால் நேற்று, பொன்னுவேலையும், போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த பண்ருட்டியில் போராட்ட ஆயத்த மாநாடு அரசு பணியாளர் சங்கம் அறிவிப்பு
-
கும்மிடி கலைமகள் பள்ளி கலை பண்பாட்டு விழா
-
ராமேஸ்வரத்தில் சுவாமி அம்மன் வீதி உலா
-
பொதட்டூர்பேட்டை பஸ் நிலையத்தில் தனியார் வாகனங்களால் நெரிசல்
-
இரு குழந்தைகள் உட்பட 4 பேர் உடல்களை ஒப்படைத்தது ஹமாஸ்
-
டில்லி பெண்களுக்கு மார்ச் 8 முதல் கிடைக்கும் ரூ.2,5-00! முதல்வராக பதவியேற்ற ரேகா குப்தா அறிவிப்பு
Advertisement
Advertisement