விபத்து இழப்பீடு வழங்காததால் ஜப்தி செய்யப்பட்ட அரசு பஸ்

பரமக்குடி: பரமக்குடியில் நடந்த விபத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் ரூ.14 லட்சம் இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் நேற்று ஜப்தி செய்யப்பட்டது. அதில் பயணம் செய்த பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே கண்ணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத் 31. இவர் 2019 பிப்., 7ல் டூவீலரில் பரமக்குடி வந்தார். அப்போது அரசு பஸ் மோதி தலையில் காயம் ஏற்பட்டது.
இதற்கு இழப்பீடு வழங்கக் கோரி பரமக்குடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து 2023 ஜூன் 27ல் வினோத்திற்கு ரூ.14 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து போக்குவரத்து கழகத்தினர் இழப்பீடு வழங்காமல் இருந்தனர்.
இந்நிலையில் பரமக்குடி சார்பு நீதிமன்ற நீதிபதி சதீஷ் பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். நேற்று காலை ராமநாதபுரத்தில் இருந்து மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ் பரமக்குடியில் நின்றது. அப்போது நீதிமன்ற ஊழியர்கள் பச்சை ஜப்தி செய்தனர்.
இதையடுத்து பஸ்சில் அமர்ந்திருந்த பயணிகள் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து மாற்று பஸ்சில் அனைவரும் அனுப்பி வைக்கப்பட்டனர். பஸ் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
ஏற்கனவே அரசு பஸ்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இயக்கப்படாத நிலையில் இது போன்ற ஜப்தி நடவடிக்கையை தவிர்க்க தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
மஹாராஷ்டிரா துணை முதல்வர் ஷிண்டேவுக்கு கொலை மிரட்டல்
-
ஏ.டி.எம்.,மில் எரிந்த நோட்டு பணம் எடுத்தவருக்கு அதிர்ச்சி
-
கிணற்றில் விழுந்த சிறுத்தை கூண்டு வைத்து பத்திரமாக மீட்பு
-
தீப்பிடித்த ஆம்னி பஸ் 26 பேர் உயிர் தப்பினர்
-
மின் இணைப்பு இல்லாமல் வீணாகி வரும் வி.ஏ.ஓ., அலுவலகம்
-
ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் மறியலுக்கு அனுமதி மறுப்பு