விஷம் குடித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு
கடலுார்: கடலுார் அருகே விஷம் குடித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கடலுார் அடுத்த பூண்டியாங்குப்பத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் பிரகாஷ்,27. கூலித்தொழிலாளி. திருமணமாகி ஐந்து வருடங்களாகிறது.
மதுகுடிக்கும் பழக்கம் உடைய பிரகாஷ், தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வருவதால் பிரச்னை ஏற்பட்டது.
பிப்.6ம் தேதி, வீட்டில் ஏற்பட்ட தகராறில், போதையில் இருந்த பிரகாஷ், விஷம் குடித்தார்.
உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.
புகாரின் பேரில் கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement