வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சி.சி.டி.வி., கேமராக்கள் இயக்கம்

கடலுார்: கடலுார் முதுநகர் மணிக்கூண்டு மற்றும் காசி கடை வீதியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 12 சி.சி.டி.வி., கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

கடலுார் முதுநகர் போலீஸ் ஸ்டேஷனில் நடந்த நிகழ்ச்சிக்கு பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா, எஸ்.பி., ஜெயக்குமார் தலைமை தாங்கி கேமராக்களை இயக்கி வைத்தனர்.

மாநில செயலாளர் கோவிந்தராஜூலு, மண்டல தலைவர் சண்முகம், கடலுார் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் துரைராஜ், மாவட்ட செயலாளர் வீரப்பன் முன்னிலை வகித்தனர்.

டி.எஸ்.பி., ரூபன்குமார், இன்ஸ்பெக்டர் ரேவதி, மாநகர செயலாளர் சீனிவாசன், பொருளாளர் முருகன், மாவட்ட இணை செயலாளர்கள் சதீஷ், சுரேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement