ஏடகநாதர் கோயில் தெப்பத் திருவிழா
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3854402.jpg?width=1000&height=625)
சோழவந்தான்: திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோயில் 32ம் ஆண்டு பிரம்ம தீர்த்த தெப்பத் திருவிழா நடந்தது.
இதை முன்னிட்டு சுவாமி, அம்மனை கோயிலில் இருந்து அழைத்து வரும் நிகழ்வு நடந்தது. சுவாமிக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜை, அபிஷேக தீபாராதனைகளை நடத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலை உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை நடந்தது. பின் மின்விளக்கு அலங்கார சப்பரத்தில் ஏலவார் குழலியம்மன், ஏடகநாதர் சுவாமி பிரம்ம தீர்த்த தெப்பத்தில் எழுந்தருளி ரத வீதிகளில் அருள்பாலித்தனர். பெண்கள் தெப்பத்தில் விளக்கேற்றி மலர் துாவி வழிபட்டனர். ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் சேவுகன் செட்டியார், நிர்வாக அதிகாரி சரவணன், விழாக் குழுவினர் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement