ரூ.15.60 லட்சம் மதிப்பில் புத்தகங்கள் விற்பனை

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி புத்தகத் திருவிழாவில், ரூ.15 லட்சத்து 59 ஆயிரத்து 320 மதிப்பில் புத்தக விற்பனை நடந்துள்ளது.

கள்ளக்குறிச்சி, துருகம் சாலையில், புத்தகத் திருவிழா கடந்த 14ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இதில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் தினமும் நடைபெற்று வருகிறது.

விழாவில் கடந்த, 4 நாட்களில் ஒரு லட்சத்து ரூ.15 ஆயிரத்து 848 பேர் பங்கேற்றுள்ளனர். மேலும், 15 லட்சத்து 59 ஆயிரத்து 320 ரூபாய் மதிப்பில் புத்தகங்கள் விற்பனையாகியுள்ளது.

அங்கு அமைக்கப்பட்டுள்ள கோளரங்கத்தினை 2,435 மாணவர்கள் பார்வையிட்டனர். மருத்துவ முகாமில் 106 பெண், 159 ஆண் என மொத்தம் 265 பேர் பரிசோதனைசெய்து கொண்டனர். இந்த தகவலை கலெக்டர் பிரசாந்த் தெரிவித்தார்.

Advertisement