முதியவருக்கு அரிவாள் வெட்டுவாலிபருக்கு 2 ஆண்டு சிறை


முதியவருக்கு அரிவாள் வெட்டுவாலிபருக்கு 2 ஆண்டு சிறை


சேலம்:சேலம், கன்னங்குறிச்சியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ், 29. கூலித்தொழிலாளியான இவர், 2013 ஜூலை, 10ல் பெரிய கொல்லப்பட்டி அருகே அரிவாளுடன் நின்று கொண்டு, வருவோர், போவோரை எல்லாம் மிரட்டியுள்ளார். இதை தட்டிக்கேட்ட, அதே பகுதியை சேர்ந்த பழனி, 70, என்பவரை அரிவாளால் வெட்டினார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். கன்னங்
குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து, ஜெயபிரகா ைஷ கைது செய்னர். இந்த வழக்கு, சேலம் முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நடந்தது. அதில் ஜெயபிரகாஷூக்கு, 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி, நீதிபதி அம்பிகா நேற்று உத்தரவிட்டார்.

Advertisement