24 மணி நேரம் தாமதமாக இயக்கப்படும் ரயில்

சேலம்: கோவை - தன்பாத் வார ரயில், செவ்வாய்தோறும் காலை, 7:50க்கு புறப்பட்டு, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியே, வெள்ளி மதியம், 1:00 மணிக்கு தன்பாத்தை அடைகிறது. கும்பமேளா நடக்கும் பிரயாக்ராஜ் வழியே செல்வதால், தன்பாத்தில் இருந்து கோவை வர வேண்டிய ரயில் தாமதமானது.


இதனால் நேற்று இரவு, 11:50க்கு கிளம்பும் என, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. அதையும் மேலும் அதிகரித்து, இன்று காலை, 7:50க்கு புறப்படும் என, மீண்டும் அறிவித்தது. இதனால் முன்பதிவு பயணியர் பலரும் அதிர்ச்சி அடைந்து, டிக்கெட்டை ரத்து செய்து வருகின்றனர்.

Advertisement