மாநகராட்சி டெண்டரில் குளறுபடி 4 நாளாக அதிகாரிகள் திணறல்

திருநெல்வேலி,:திருநெல்வேலி மாநகராட்சியில் பிப்., 7 ல் ரூ. 9 கோடி மதிப்பில் 13 பேக்கேஜ்கள் ரோடுகள் போடும் பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டது.

இதில் 13 ஒப்பந்தக்காரர்கள் பங்கேற்றனர். அன்று மாலையே அதிகாரிகள் ஆன்லைன் டெண்டரை திறந்து முடிவு எடுத்திருக்க வேண்டும். ஆனால் 13 ஒப்பந்தக்காரர்களில் மூன்று பேர் போதிய உபகரணங்கள், நிதி நிலைமை, தொழில்நுட்பம் இல்லாதவர்கள் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரிய வந்தது.

எனவே அவர்களுக்கு பணிகள் ஒதுக்கினால் முறையாக பணிகள் நடக்குமா என அதிகாரிகள் தயங்கினர். இருப்பினும் மேலிட அழுத்தத்தால் அவர்களையும் தவிர்க்க முடியாமல் டெண்டரிலும் முடிவெடுக்க முடியாமலும் நேற்று மாலை வரை 4 நாட்களாக மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா உள்ளிட்ட அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.

Advertisement