உட்கார ரூ.10 கட்டணம் சேர்களை பறித்த அதிகாரிகள்
திருநெல்வேலி:திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் பஸ்சுக்கு காத்திருப்பவர்கள் உட்கார ரூ.10 வசூலித்த நிறுவனத்தின் சேர்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வண்ணார்பேட்டை மேம்பால வடக்கு பகுதியில் மதுரை, சங்கரன்கோவில் உள்ளிட்ட வெளியூர் பஸ்கள் நின்று செல்லும். அங்கு ஒரே ஒரு பயணிகள் நிழற்குடை உள்ளது. பஸ்சுக்கு காத்திருப்பவர்கள் உட்கார அங்கு இருசக்கர காப்பகம் நடத்தும் ஒரு தரப்பினர் நிறுவனத்தின் வாசலில் சேர்களை போட்டு அதில் உட்கார ரூ. 10 வசூலித்தனர். இதுகுறித்து நேற்று தினமலர் செய்தி வெளியிட்டது.
அதன் எதிரொலியாக மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா உத்தரவின் பேரில் தச்சநல்லூர் உதவி கமிஷனர் ஜான்சன், உதவி இன்ஜினியர் பேரின்பம் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நேற்று அந்த வாகன காப்பகத்திற்கு சென்றனர். அனுமதி இன்றி இவ்வாறு கட்டண வசூலில் ஈடுபட்டது தவறு என சுட்டிக்காட்டினர். அவ்வாறு செய்ய மாட்டோம் என எழுத்துபூர்வமாக தருமாறு உத்தரவிட்டனர். அங்கிருந்த 11 சேர்களை பறிமுதல் செய்தனர்.

மேலும்
-
வெம்பக்கோட்டை அகழாய்வில் சங்கு பதக்கம் கண்டெடுப்பு
-
இரவு பணியை குறைக்கக்கோரி ரயில் ஓட்டுனர்கள் உண்ணாவிரதம்
-
தேசிய அளவிலான நீதிமன்ற போட்டி துவக்கம்
-
100 நாள் வேலைக்கான சம்பளம் 3 மாதம் பாக்கியால் போராட்டம்
-
ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு தி.மு.க.,வில் கடும் போட்டி
-
பனை மரத்தில் சிவப்பு ஒளிர்வான் பொருத்த வேண்டுகோள்