ஈரோடு ஜவுளி சந்தையில் சில்லறை விற்பனை அதிகரிப்பு

ஈரோடு: ஈரோட்டில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்றிரவு வரை ஜவுளிச்சந்தை நடந்தது. வழக்கத்தைவிட நேற்று கூடுதலாக சாலையோர கடைகளும், மார்க்கெட் பகுதியில் கடைகளும், வாகனங்களில் வைத்தும் விற்பனை நடந்தது.


இதுபற்றி வியாபாரிகள் கூறியதாவது: கடந்த சில வாரமாக குளிர், பனி நீடித்ததால் அதற்கேற்ப ஆடைகளை மக்கள், கடைக்காரர்கள், வியாபாரிகள் வாங்கி சென்றனர். சில நாட்களாக பனி குறைந்து, பகலில் கடும் வெயில் வாட்டுவதால், காட்டன் துணிகள், துண்டு, பெட்ஷீட், நைட்டி, வேட்டி, லுங்கி, பனியன், டீ-ஷர்ட் அதிகம் வாங்க துவங்கி உள்ளனர். மார்ச், ஏப்., மாதங்களில் விற்பனை சீசன் இருக்காது என்பதால், சில்லறை விற்பனையே அதிகமாக நடந்தது. கடைக்காரர்கள், வியாபாரிகள் குறைவாகவே வந்தனர். மொத்த விற்பனையைவிட, சில்லறை விற்பனையாக மக்கள் ஓரளவு வாங்கி சென்றனர். இவ்வாறு கூறினர்.

Advertisement