கொலை மிரட்டல்: இருவர் மீது வழக்கு

தேவதானப்பட்டி, : தேவதானப்பட்டி அருகே ஜி.கல்லுப்பட்டி முத்தாலம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் காந்தி 76. தென்னந்தோப்பில் வத்தலகுண்டு காந்திநகரைச் சேர்ந்த பார்த்திபன், ஜி.கல்லுப்பட்டி மேற்கு தெரு வீரக்குமார் இருவரும் தேங்காய் வெட்டியுள்ளனர்.

இது குறித்து தேவதானப்பட்டி போலீசில் காந்தி புகார் கொடுத்தார். தகவல் அறிந்து இருவரும் காந்நியை வழிமறித்து, 'எங்கள் மீது போலீசில் புகார் கொடுப்பியா' என அவதூறாக பேசி கையால் தாக்கி அரிவாளால் காந்தியை வெட்ட முயன்றனர். காந்தி சத்தம் போட்டதும் கொலை மிரட்டல் விடுத்தவர்கள் தப்பினர். புகாரில் தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement