காரைக்குடியில் ''நக்சா'' 3டி சர்வே தொடக்கம்
காரைக்குடி : காரைக்குடி மாநகராட்சியில் 3டி சர்வே திட்டமான 'நக்சா எனும் நகர்ப்புற வாழ்விடங்களுக்கான தேசிய புவிசார் அறிவியல் ரீதியான நில அளவை திட்டத்தை கலெக்டர் ஆஷா அஜித் தொடங்கி வைத்தார்.
காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த தொடக்க விழாவில், மாங்குடி எம்.எல்.ஏ., சப் கலெக்டர் ஆயுஷ் வெங்கட், மேயர் முத்துத்துரை, கமிஷனர் சித்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கலெக்டர் ஆஷா அஜித் கூறுகையில்: நில விபரம் மிக முக்கியமான ஒன்றாகும். நில ஆவணங்களை பராமரிப்பது கடினம். இதனை எளிதாக்கும் விதமாக புதிய அறிவியல் ரீதியான சர்வே தொடங்கப்பட்டுள்ளது. பெரும்பாலும், நகரங்களில் தான் நில ஆவண சவால்கள் அதிகம் உள்ளது. இதனை சரி செய்யும் விதமாக நக்சா 3டி சர்வே தொடங்கப்பட்டுள்ளது. இந்த சர்வே மூலம் நிலம் மட்டுமின்றி, கட்டடங்களும் கணக்கீடு செய்யப்படும். இப்பணியின் மூலம் மாநகராட்சியில் முறையான வரிகளை வரைமுறை படுத்துவதோடு, மாநகராட்சிக்கு வருமானமும் அதிகரிக்கும்.
தவிர, பொதுமக்களும், நில ஆவணங்களை எளிதாக கண்டறிந்து, விற்கவோ வாங்கவோ முடியும். இரண்டு நிலைகளைக் கொண்ட இத்திட்டத்தின் முதல் நிலையான ட்ரோன் சர்வே நடந்து முடிந்துள்ளது. காரைக்குடி மாநகராட்சியில் உள்ள 17 சர்வே வார்டுகளில் எல்லை கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் நிலையாக, 3 டி சர்வே திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதற்காக குழுக்கள் நியமிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியாக சென்று கணக்கீடு நடைபெறும். இந்த சர்வே பணி ஒரு வருடம் நடைபெறும். சர்வே பணிக்கு பிறகு, இறுதியாக, அனைத்து ஆவணங்களும் உறுதி செய்யப்பட்டு துல்லியமான தரவு கிடைக்கும்.

மேலும்
-
கொலையாளிக்கு அடைக்கலம் கணவன், மனைவிக்கு 'கம்பி'
-
சிறுமி படத்தை சித்தரித்த தி.மு.க., நிர்வாகி மகன் கைது
-
விபத்து வாகனத்தை அகற்றுவதில் அலட்சியம் திருவாலங்காடு வாகன ஓட்டிகள் திக்... திக்
-
ஆசிரியரை கொடூரமாக தாக்கி பணம் பறித்த சிறார்கள் சிக்கினர்
-
மஹாராஷ்டிரா துணை முதல்வர் ஷிண்டேவுக்கு கொலை மிரட்டல்
-
ஏ.டி.எம்.,மில் எரிந்த நோட்டு பணம் எடுத்தவருக்கு அதிர்ச்சி