கணினி இல்லாமல் படிக்கும் அவலம்
சிவகங்கை, : சிவகங்கை அருகே சக்கந்தி மேல்நிலைப்பள்ளியில் கணினி அறிவியல் பாடப் பிரிவில் கணினியே இல்லாமல் பாடம் படிக்கும் அவலம் நீடிப்பதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
சிவகங்கை அருகே உள்ளது சக்கந்தி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளி கடந்த 2020- =21ஆம் கல்வி ஆண்டில் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. பிளஸ் 1, பிளஸ் 2 வில் இயற்பியல், வேதியல், உயிரியல், கணினி அறிவியல் உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கு என்று தனி வகுப்பறை கிடையாது. அதேபோல் இந்த பாடங்களுக்கு ஆய்வக வசதி இதுநாள் வரை அரசு ஏற்படுத்தி தரவில்லை. ஒவ்வொரு பாடத்திற்கும் வாரத்திற்கு இரண்டு பாட வேளை ஆய்வகங்களில் செய்முறை பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
ஆய்வக பயிற்சியே இல்லாமல் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் அகமதிப்பீடு தேர்விற்கு மட்டும் ஆய்வக வசதியுள்ள பிற பள்ளிகளுக்கு அழைத்து செல்லப்பட்டு தேர்வு நடத்தப்பட்டு அக மதிப்பீடு வழங்கப்பட்டு அரசு தேர்வில் தேர்ச்சி பெற்று கல்லுாரி படிப்புக்கு செல்கின்றனர். அதேபோல் கணினி அறிவியல் மாணவர்கள் கணினி இல்லாமலேயே பாடம் படித்து வருகின்றனர்.
இட நெருக்கடியில் மரத்தடியிலும் தரையிலும் அமர்ந்து பாடம் படிக்கும் சூழல் இருப்பதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே சக்கந்தி மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டடம், ஆய்வக வசதி ஏற்படுத்திதர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
மஹாராஷ்டிரா துணை முதல்வர் ஷிண்டேவுக்கு கொலை மிரட்டல்
-
ஏ.டி.எம்.,மில் எரிந்த நோட்டு பணம் எடுத்தவருக்கு அதிர்ச்சி
-
கிணற்றில் விழுந்த சிறுத்தை கூண்டு வைத்து பத்திரமாக மீட்பு
-
தீப்பிடித்த ஆம்னி பஸ் 26 பேர் உயிர் தப்பினர்
-
மின் இணைப்பு இல்லாமல் வீணாகி வரும் வி.ஏ.ஓ., அலுவலகம்
-
ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் மறியலுக்கு அனுமதி மறுப்பு