கொலை வழக்கில் கைதான4 பேருக்கு குண்டாஸ்
ராமநாதபுரம்,:ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இரு தரப்பு மோதலின் போது இளைஞரை கத்தியால் குத்திக்கொலை செய்த வழக்கில் 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ராமேஸ்வரம் சேராங்கோட்டை, தெற்கு கரையூர் பகுதிகளை சேர்ந்த இரு தரப்பினரிடம் ஜன.,14 இரவு தகராறு நடந்தது. இதில் சேராங்கோட்டை நம்புகுமார் உள்ளிட்ட 6 பேர் காயமடைந்தனர். கழுத்தின் பின் பகுதியில் கத்திக் குத்துப்பட்ட நம்புகுமார் உயிரிழந்தார். துறைமுகம் போலீசார் தெற்கு கரையூரை சேர்ந்த 8 பேரை கைது செய்தனர்.
அவர்களில் நாகேந்திரன் மகன் சொர்க்கேஸ்வரன் 20, சிவகுமார் மகன் அயன் சரண்குமார் 20, முத்துவேல் மகன் நம்பு சரண் 19, கோபி மகன் அஸ்வின் 22, ஆகியோர் தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டனர். இதையடுத்து எஸ்.பி., சந்தீஷ் பரிந்துரையின் பேரில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
மேலும்
-
'அழகாக இருக்கிறீர்கள்' என்று மெசேஜ் அனுப்பினாலே குற்றம்: மும்பை நீதிமன்றம்
-
இந்தியா-பாக்., மோதல்... 'வின்னர்' யார்: கங்குலி, அப்ரிதி கணிப்பு எப்படி
-
பெங்களூருவை வீழ்த்தியது மும்பை: கடைசி ஓவரில் 'திரில்' வெற்றி
-
சரத்கமல், போபண்ணா நீக்கம் * மத்திய விளையாட்டு அமைச்சகம் 'ஷாக்'
-
இந்தியா உலக சாதனை * ஆசிய கோப்பை வில்வித்தையில்...
-
கோலிக்கு கும்ளே 'அட்வைஸ்'