வேடியப்பன் தேர் திருவிழா


வேடியப்பன் தேர் திருவிழா

ஊத்தங்கரை:ஊத்தங்கரை அடுத்த, வீரியம்பட்டி கூட்ரோடு, கந்த மாரியம்மன், வேடியப்பன் சுவாமி, 37ம் ஆண்டு தேர் திருவிழா நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில், அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, மாரியம்மன், வேடியப்பனுக்கு மாவிளக்கு எடுத்து பொங்கலிட்டு, அம்மன் கரக உற்சவம் நடந்தது. மாரியம்மன், வேடியப்பன் ரத ஊர்வலத்துடன், பம்பை சிலம்பாட்டம், வாணவேடிக்கையுடன் ஊர்வலம் சென்றது. பக்தர்கள், தலைமீது தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Advertisement