வெறிநாய் கடித்து 8 பேர் காயம்


வெறிநாய் கடித்து 8 பேர் காயம்

ஓசூர்:ஓசூர் அடுத்த முத்தம்பட்டி, உள்ளுக்குறுக்கை, வரகானப்பள்ளி மற்றும் டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆகிய பகுதிகளில் வெறிநாய் ஒன்று சுற்றித்திரிந்து, அங்குள்ள சாலையில் செல்லும் பொதுமக்களை விரட்டி விரட்டி கடித்து வருகிறது. நேற்று மதியம் உள்ளுக்குறுக்கை அருகே சென்ற, மாணவியர் இருவர் உட்பட, 8 பேரை கடித்துள்ளது. காயமடைந்த, 4 பேர் ஓசூர் அரசு மருத்துவமனையிலும் மற்ற, 4 பேர் அப்பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றனர். உள்ளுக்குறுக்கை பகுதியில் அனைவரையும் கடித்து வரும் வெறிநாயை பிடிக்க கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement