உதவி பேராசிரியர் தகுதி இறக்கம் சரிபல்கலை நிர்வாகம் விளக்கம்
உதவி பேராசிரியர் தகுதி இறக்கம் சரிபல்கலை நிர்வாகம் விளக்கம்
ஓமலுார்:உயர்நீதிமன்றத்தில் உதவி பேராசியர் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், அவர் மீதான தகுதி இறக்க நடவடிக்கை சரி என உறுதி செய்யப்பட்டுள்ளதாக, பெரியார் பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சேலம் பெரியார் பல்கலை நிர்வாக அறிக்கை: பெரியார் பல்கலையில் நடந்த பணி நியமனங்களில் ஊழல் நடந்ததாக, பல்கலையின் பொருளியல் துறை உதவி பேராசிரியர் வைத்தியநாதன், நாளிதழில் பேட்டி கொடுத்திருந்தார். ஆதாரமற்ற குற்றச்சாட்டு, பல்கலை நற்பெயருக்கு ஊறு விளைவிக்கும்படி இருப்பதை அறிந்த நிர்வாகம், 2018ல் அவர் மீது விசாரணைக்குழு அமைத்தது. அதன் அறிக்கைப்படி, ஆதாரமற்ற குற்றச்சாட்டு கூறியிருப்பது நிரூபணமானது.
இதனால் ஆட்சி குழு ஒப்புதலுடன், வைத்தியநாதன் பெற்று வந்த, 8,000 ரூபாய் கல்வி நிலை தகுதி ஊதியத்தில் இருந்து, 7,000 ரூபாயாக குறைக்கப்பட்டு, தகுதி இறக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து வைத்தியநாதன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன் விசாரணை முடிவில் நேற்று முன்தினம் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதன்மூலம் பல்கலை மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பொதுவெளியில் பரப்பியதற்கு, வைத்தியநாதனுக்கு வழங்கப்பட்ட தகுதி இறக்க நடவடிக்கை சரி என உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும்
-
'அழகாக இருக்கிறீர்கள்' என்று மெசேஜ் அனுப்பினாலே குற்றம்: மும்பை நீதிமன்றம்
-
இந்தியா-பாக்., மோதல்... 'வின்னர்' யார்: கங்குலி, அப்ரிதி கணிப்பு எப்படி
-
பெங்களூருவை வீழ்த்தியது மும்பை: கடைசி ஓவரில் 'திரில்' வெற்றி
-
சரத்கமல், போபண்ணா நீக்கம் * மத்திய விளையாட்டு அமைச்சகம் 'ஷாக்'
-
இந்தியா உலக சாதனை * ஆசிய கோப்பை வில்வித்தையில்...
-
கோலிக்கு கும்ளே 'அட்வைஸ்'