சின்ன வெங்காயம்கிலோ ரூ.40 ஆக சரிவு
சின்ன வெங்காயம்கிலோ ரூ.40 ஆக சரிவு
சேலம் :சேலம் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகள், செவ்வாய்ப்பேட்டை பால் மார்க்கெட், லீபஜார், டவுன் கடை வீதி, ஆற்றோர காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்படும் மார்க்கெட்டுகளுக்கு, சின்ன வெங்காயம் வரத்து அதிகரித்து அதன் விலை சரிந்துள்ளது.
இதுகுறித்து உழவர் சந்தை அதிகாரிகள் கூறியதாவது: முதல் பட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த சின்ன வெங்காயம், கடந்த மாதம் பெய்த மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டு, காய் சரியாக இல்லை. இதனால் வரத்து குறைந்து விலை உயர்ந்தது. குறிப்பாக சந்தைகளில் கடந்த ஜன., 6ல் கிலோ, 70 முதல், 75 ரூபாய், வெளி மார்க்கெட்டில், 80 முதல், 100 ரூபாய் வரை விற்றது. தற்போது இளம்பட்டம் சின்ன வெங்காயம் வரத்து அதிகமாக உள்ளது. அதற்கு விளைச்சல், தரம் நன்றாக உள்ளதே காரணம். வரத்தும், 20 முதல் 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதனால் அதன் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. உழவர் சந்தையில் கடந்த வாரம் சின்ன வெங்காயம் கிலோ, 50 முதல், 60க்கு விற்றது, நேற்று, 40 முதல், 50 ரூபாயாக குறைந்தது. பெரிய வெங்காயம் வரத்து சீராக உள்ளதால் விலையில் மாற்றமின்றி, கிலோ, 50 முதல், 55 ரூபாய்க்கு விற்பனையானது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
'அழகாக இருக்கிறீர்கள்' என்று மெசேஜ் அனுப்பினாலே குற்றம்: மும்பை நீதிமன்றம்
-
இந்தியா-பாக்., மோதல்... 'வின்னர்' யார்: கங்குலி, அப்ரிதி கணிப்பு எப்படி
-
பெங்களூருவை வீழ்த்தியது மும்பை: கடைசி ஓவரில் 'திரில்' வெற்றி
-
சரத்கமல், போபண்ணா நீக்கம் * மத்திய விளையாட்டு அமைச்சகம் 'ஷாக்'
-
இந்தியா உலக சாதனை * ஆசிய கோப்பை வில்வித்தையில்...
-
கோலிக்கு கும்ளே 'அட்வைஸ்'