கோரிக்கை ஆவணம் வழங்க ஊரக வளர்ச்சிதுறை முடிவு சங்க மாநிலத்தலைவர் பேட்டி

ராமநாதபுரம்:தி.மு.க., அரசு அளித்த உறுதிமொழிகளை பட்டியலிட்டு கோரிக்கைகளைஆவணமாக தயாரித்து அரசிடம் வழங்க உள்ளதாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில தலைவர் எஸ்.ரமேஷ் ராமநாதபுரத்தில் தெரிவித்தார். அவர் கூறியதாவது:
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாநில மாநாடு ராமநாதபுரத்தில் பிப்., 20, 21 நடக்கிறது.
சங்கத்தில் 25 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர்.
எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாமல் தொடர்ந்து போராட்டத்திற்கு அரசு தள்ளியுள்ளது.அரசு எங்களுக்கு அளித்த உறுதிமொழிகளை செயல்படுத்துவதற்கும், அடுத்த கட்ட போராட்டங்கள் குறித்து திட்டமிட உள்ளோம்.நாளை (இன்று பிப்.21) பொதுநலன், மக்கள் நலன் சார்ந்த 150க்கும் மேற்பட்ட தீர்மானங்களை நிறைவேற்ற உள்ளோம்.
அவற்றை ஆவணமாக தயார் செய்து அரசிடம் வழங்க உள்ளோம் என்றார்.
மாநில செயலாளர் சோமசுந்தர் உடனிருந்தார்.
மேலும்
-
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தொல்லியல் விழிப்புணர்வு
-
பழுதடைந்த அரசு பஸ்களை சீரமைக்க கோரி வழக்கு; உயர்நீதிமன்றம் தள்ளுபடி
-
டாடா இ.வி., கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை சலுகை
-
செங்கை புத்தக திருவிழாவில் குவிந்த அரசு பள்ளி மாணவர்கள்
-
இடைக்கழிநாடு பேரூராட்சியில் எல்.இ.டி., விளக்குகள் அவசியம்
-
வெளிநாட்டு கரன்சி கடத்தல் வி.சி., பிரமுகருக்கு தொடர்பு?