வெளிநாட்டு கரன்சி கடத்திய 3 பேர் கைது

சென்னை:பெங்களூருவில் இருந்து இலங்கைக்கு, 2.12 கோடி ரூபாய் மதிப்புள்ள, வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் கடத்திய, மூன்று பேரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து, இலங்கை செல்லும் விமானத்தில், வெளிநாட்டு பணம் கடத்தப்படுவதாக, சி.ஐ.எஸ்.எப்., எனப்படும், மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் வாயிலாக, பெங்களூரு அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இலங்கைக்கு செல்ல இருந்த, அந்நாட்டை சேர்ந்த விமல்ராஜ் துரைசிங்கம், திலீபன் ஜெயந்தி குமார், சென்னையை சேர்ந்த வீரகுமார் ஆகியோரை, அதிகாரிகள் பிடித்து விசாரித்தனர்.

அவர்களின் உடமைகளை சோதனை செய்த போது, அதில், 2.12 கோடி ரூபாய் மதிப்புள்ள, சவுதி அரேபியா ரியால், அமெரிக்க டாலர்கள், ஐரோப்பாவின் யூரோ நோட்டுகள் இருப்பதைத் கண்டனர். அவற்றை பறிமுதல் செய்து, மூன்று பேரையும் கைது செய்தனர்.

Advertisement