'மாநில கல்வி உரிமையை யு.ஜி.சி., வரைவு பறிக்கிறது'

சென்னை:''யு.ஜி.சி.,யின் புதிய வரைவு கொள்கை, மாநில கல்வி உரிமையை பறிப்பதாக உள்ளது,'' என, உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பேசினார்.

கேரள மாநிலம், திருவனந்தபுரம் பல்கலையில், யு.ஜி.சி.,யின் புதிய வரைவு குறித்த தேசிய மாநாடு, நேற்று நடந்தது. அதில் பங்கேற்ற அமைச்சர் கோவி.செழியன் பேசியதாவது:

கல்வி, சமூக நீதி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில், தமிழகம் முன்னிலையில் உள்ளது. மத்திய பட்ஜெட்டில், நாட்டின் மொத்த கல்விக்கான நிதி ஒதுக்கீட்டில், 17 சதவீதம், தமிழகத்திற்கு எங்கள் அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பல்கலை துணை வேந்தர்கள், கல்லுாரி ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களை நியமிப்பதில், குறைந்தபட்ச தகுதியாக, யு.ஜி.சி., நிர்ணயித்துள்ள தகுதிகளால், மாநில கல்வி உரிமை பறிக்கப்படும். ஒருங்கிணைந்த பட்டியலில் கல்வி உள்ள நிலையில், பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ், இந்த வரைவு சட்டமாக்கப்பட உள்ளது. இதில், மாநில அரசுகளின் சம்மதம் அவசியம். அதை, மத்திய அரசும், பல்கலை மானிய குழுவும் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement