அமெரிக்க எப்.பி.ஐ.,இயக்குனராக இந்தியர் காஷ்யப் படேல் நியமனம் :அறிவித்தார் டிரம்ப்

10

வாஷிங்டன்: அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., இயக்குனராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ்யப் படேலை நியமித்து டிரம்ப் உத்தரவு பிறப்பித்தார் அதிபர் டெனால்டு டிரம்ப்.


பல்வேறு நாடுகளில் உளவு அமைப்புகளில் மிகவும் வலிமையானது அமெரிக்காவின் எப்.பி.ஐ., அமைப்பாகும். இந்த அமைப்பு எதிரி நாடுகள், நட்பு நாடுகள் என அனைத்தையும் 24 மணி நேரமும் கண்காணிப்பில் வைத்திருக்கும் வேலையை செய்கிறது. போர்களை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் செய்வது தான் இந்த அமைப்புக்கு முழு நேர வேலையாக தரப்பட்டிருக்கிறது.

இதன் இயக்குனராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ்யப் படேலை கடந்தாண்டு டிசம்பரில் நியமித்து டிரம்ப் உத்தரவிட்டார் டிரம்ப். இந்நிலையில் நேற்று வெளியான அறிவிப்பில் காஷ்யப் படேல் அமெரிக்க புலனாய்வு அமைப்பின் இயக்குனராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.


யார் இந்த காஷ்யப் படேல் ?

1980ம் ஆண்டு நியூயார்க்கில், கிழக்கு ஆப்ரிக்காவில் இருந்து குடியேறிய இந்திய பெற்றோருக்கு காஷ்யப் படேல் பிறந்தார். இவரது பெற்றோர் குஜராத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள்.

இவர் லண்டன் பல்கலை.,யில் சட்டப்படிப்பு முடித்துள்ளார். டிரம்பின் முதல் அதிபர் பதவி காலத்தில் காஷ்யப் படேல் பல்வேறு உயர் பதவிகளில் பணியாற்றினார்.

Advertisement