ரூ.58,104 கோடி வரி செலுத்திய அதானி குழுமம்!

4

புதுடில்லி : கடந்த 2023-24 நிதியாண்டில் ரூ.58,104 கோடியை வரியாக அதானி குழுமம் செலுத்தியுள்ளது.

அதானி குழுமம் துறைமுகம் முதல் மின்சாரம் வரை பல துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதனால், மத்திய அரசுக்கு அதிக வரி செலுத்தும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இந்த குழுமம் விளங்கி வருகிறது.


கடந்த 2022-23ம் நிதியாண்டில் ரூ.46,610 கோடி மத்திய அரசுக்கு வரியாக செலுத்தியிருந்தது. இந்த நிலையில், 2023-24ம் நிதியாண்டில் அதை விட கூடுலாக வரி செலுத்தியுள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிய வந்துள்ளது. அதாவது, ரூ.58,104 கோடியை வரியாக செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


இது குறித்து அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி கூறுகையில், "இந்தியாவில் அதிக வரி செலுத்துபவர்களில் எங்களது குழுமமும் ஒன்று. அரசு நிர்வாகங்களுடன் இருக்கும் இணக்கத்தையும் மீறி, எங்களின் பொறுப்பை நாங்கள் அறிவோம். மேலும், இது எங்களின் நேர்மை மற்றும் பொறுப்பை வெளிக்காட்டுகிறது. நாட்டின் நிதியில் நாங்கள் வரியாக கொடுக்கும் ஒவ்வொரு ரூபாய் பங்களிப்பும், வெளிப்படைத்தன்மை மற்றும் நல்ல ஆட்சியின் மீதான எங்கள் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது," என்றார்.

Advertisement