பனாமாவுக்கு நாடு கடத்தப்பட்ட 12 இந்தியர்களுடன் டில்லி வந்த விமானம்

புதுடில்லி: அமெரிக்காவிலிருந்து பனாமாவிற்கு நாடு கடத்தப்பட்ட 12 இந்தியர்களை ஏற்றி வந்த விமானம் இன்று டில்லியில் தரை இறங்கியது.
சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்த லட்சக்க்கணக்கான ஆவணமற்ற குடியேறிகளை நாடு கடத்த டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி பல்வேறு நாடுகளுக்கும் குடியேறிகள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். இதன் ஒரு பகுதியாக, ஏற்கனவே மூன்று குழுக்களை சேர்ந்த மொத்தம் 332 நபர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியுள்ளது.
தற்போது அமெரிக்காவிலிருந்து பனாமாவிற்கு நாடு கடத்தப்பட்ட 12 இந்தியர்கள் டில்லி விமானத்தில் வந்து சேர்ந்துள்ளனர். துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இஸ்தான்புல் வழியாக இவர்கள் டில்லியில் தரையிறங்கினர்.
இவர்களில் நான்கு பேர் பஞ்சாபிலிருந்தும், தலா மூன்று பேர் ஹரியானா மற்றும் உத்தரபிரதேசத்திலிருந்தும் அமெரிக்கா சென்றவர்கள் என தெரியவந்துள்ளது.
சட்டவிரோத குடியேறிகளை, பனாமா மற்றும் கோஸ்டாரிக்கா நாடுகளில் முகாம் அமைத்து தங்க வைக்க அமெரிக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.
பனாமா நாட்டு முகாமில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட முதல் இந்தியர்கள் குழு இது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்
-
செட்டிபுண்ணியம் சாலை படுமோசம் வாகன ஓட்டிகள் தினமும் தவிப்பு
-
எலும்புகூடான மின்கம்பம் வண்டலுாரில் விபத்து பீதி
-
பங்காரு அடிகளார் பிறந்தநாள் குருஜோதி விழா துவக்கம்
-
குரோம்பேட்டை சிக்னலில் 'யு - டர்ன்' தடை விதித்து தடுப்பு அமைப்பு
-
புதிய காவல் நிலையம் அமைக்க படப்பையில் இடம் தேர்வு
-
மழைநீர் வடிகால்வாயில் கழிவுநீர் கலப்பதால் சீர்கேடு