மோடி, டிரம்ப், மெலானி சேர்ந்தால் ஜனநாயகத்துக்கே பேராபத்தா? இடதுசாரிகளை வெளுத்தார் இத்தாலி பிரதமர்!

வாஷிங்டன்: உலகம் முழுவதும் உள்ள பழமைவாதிகள் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக சித்தரிக்கப்படுகிறார்கள் என இத்தாலி பிரதமர் மெலானி குற்றம் சாட்டியுள்ளார்.
@1brஅமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் CPAC-2025 என்னும் பெயரில் கன்சர்வேடிவ் பாலிடிக்ஸ் ஆக்ஷன் மாநாடு நடந்தது. இதில் மோடி, டிரம்ப், மெலானி சேர்ந்தால் ஜனநாயகத்துக்கே ஆபத்து என்று இடதுசாரிகள் இரட்டை வேடம் போடுகின்றனர் என இத்தாலி பிரதமர் மெலானி அனல் பறக்க பேசினார்.
உலகம் முழுதும் ஆட்சி செய்யும் இடதுசாரி தலைவர்களை வெளுத்து வாங்கினார். அவர் பேசியதாவது: அமெரிக்க தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதும் உலகின் இடதுசாரி தலைவர்கள் பதற்றத்தில் உள்ளனர். அவர்களிடம் இருந்த வெறுப்பு இப்போது வெறியாக மாறிவிட்டது.
டிரம்ப், இந்திய பிரதமர் மோடி, அர்ஜென்டினா அதிபர் மிலே மற்றும் என்னை இடதுசாரிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அவர்கள் எப்படி கதறினாலும், கன்சர்வேடிவ் தலைவர்களின் செல்வாக்கு ஐரோப்பிய பிராந்தியத்தில் வேகமாக உயர்ந்து வருகிறது என்பது தான் உண்மை. தொடர்ந்து வெற்றியை குவித்து வரும் கன்சர்வேடிவ் தலைவர்கள், இப்போது உலக அளவில் இணைந்து செயல்பட துவங்கி இருப்பது நல்ல விஷயம்.
தொன்னூறுகளில் அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளின்டன், டோனி பிளேயர் உலகம் முழுதும் இடதுசாரி தலைவர்களுக்கான நெட்வொர்க்கை ஏற்படுத்தினர். தங்களை சிறந்த அரசியல்வாதிகள் என்று சொல்லிக்கொண்டனர். ஆனால் இப்போது டிரம்ப், மோடி, மெலானி, மிலே சேர்ந்தால், ஜனநாயகத்துக்கே அச்சுறுத்தல் என்று புலம்புகின்றனர். இதுதான் இடதுசாரிகளின் இரட்டை நிலைபாடு.
நல்ல விஷயம் என்னவென்றால், இடதுசாரிகளின் பொய்களை மக்கள் அடியோடு நிராகரித்து வருகின்றனர். என்ன தான் எங்கள் மீது இடதுசாரிகள் சேற்றை வாரி வீசினாலும், மக்கள் எங்களுக்கு தான் ஓட்டுப்போடுகின்றனர். காரணம், இடதுசாரிகள் நினைப்பது போல் மக்கள் ஒன்றும் அவ்வளவு அப்பாவிகள் இல்லை என்று மெலானி கூறினார்.
நெருங்கிய நட்பு
மெலானிக்கும் மோடிக்கும் நெருங்கி நட்பு இருக்கிறது. டிரம்புடனும் அவர் நல்ல நட்பை பேணி வருகிறார். மோடியுடன் ஒரு முறை மெலானி செல்பி போட்டோ எடுத்தார். அதை தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்த மெலானி, இது மெலோடி டீம் என்று பதிவிட்டார்.
மெலானி, மோடி ஆகிய இரு பெயர்களையும் இணைத்து அவர் மெலோடி என்று கூறியது பெரும் வரவேற்பை பெற்றது. அந்த செல்பி போட்டோ உலகம் முழுதும் ட்ரெண்ட் ஆனது.
வாசகர் கருத்து (2)
Kasimani Baskaran - Singapore,இந்தியா
23 பிப்,2025 - 22:06 Report Abuse

0
0
Reply
Petchi Muthu - TIRUNELVELI,இந்தியா
23 பிப்,2025 - 22:03 Report Abuse

0
0
Reply
மேலும்
-
ரயில்வே சுரங்கபாதை பணிகளை முடிக்காவிட்டால் போராட்டம் * போஸ்டர் ஒட்டிய சமூக நல அமைப்புகள்
-
தேசிய மாதிரி நீதிமன்ற போட்டி ராமநாதபுரம் கல்லுாரி முதலிடம்
-
செட்டிபுண்ணியம் சாலை படுமோசம் வாகன ஓட்டிகள் தினமும் தவிப்பு
-
எலும்புகூடான மின்கம்பம் வண்டலுாரில் விபத்து பீதி
-
பங்காரு அடிகளார் பிறந்தநாள் குருஜோதி விழா துவக்கம்
-
குரோம்பேட்டை சிக்னலில் 'யு - டர்ன்' தடை விதித்து தடுப்பு அமைப்பு
Advertisement
Advertisement