குவாரி குத்தகை உரிமத்திற்கு இணையத்தில் விண்ணப்பிக்கலாம்

- நமது நிருபர் -

குவாரி குத்தகை உரிமத்திற்கு, இணையதளம் வாயிலாக இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை: மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகள், 1959ன் படி சாதாரண கற்கள், மண், கிராவல் மற்றும் கிரானைட் போன்ற சிறுவகை கனிமங்கள் மற்றும் 31 வகை சிறுகனிமங்களுக்கான குவாரி குத்தகை லைசென்ஸ் கோரும் விண்ணப்பங்கள் மற்றும் செங்கல் சூளை பதிவுச்சான்று பெறுவதற்கான விண்ணப்பங்கள் இன்று (24ம் தேதி) முதல் மின்னணு முறையில் இணையதளம் வாயிலாக மட்டும் பெறப்படும். சிறுகனிமங்களுக்கான குவாரி குத்தகை லைசென்ஸ் கோருவோர் www.mimas.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்.

Advertisement