வடாரண்யேஸ்வரர் கோவிலில் மஹா சிவராத்திரி ஏற்பாடு

திருவாலங்காடு:திருத்தணி முருகன் கோவிலின் உபக்கோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நாளை மறுநாள் மற்றும் 27ம் தேதி, மஹா சிவராத்திரி விழா நடைபெற உள்ளது.

இதையொட்டி விழா முன்னேற்பாடுகள் குறித்து, திருத்தணி முருகன் கோவில் இணை ஆணையர் ரமணி மற்றும் அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன் மற்றும் உறுப்பினர் சுரேஷ்பாபு உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது பக்தர்கள் வந்து செல்வதற்கான வசதி குடிநீர், கழிப்பறை, மற்றும் கலை நிகழ்ச்சிக்கான இடம் உள்ளிட்டவை குறித்து. அங்கு நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது, கோவில் பொறியியல் பிரிவினர் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Advertisement