திருத்தணி கோவிலில் வார விடுமுறை நாட்களில் குவியும் பக்தர்கள்

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில் நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு தங்கவேல், தங்ககீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து மஹா தீபாராதனை நடந்தது.


வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கத்திற்கு மாறாக காலை, 6:00 மணி முதல் இரவு, 9:00 மணி வரை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக் கோவிலுக்கு சென்று குறைந்த பட்சம், இரண்டரை மணி நேரம் பொதுவழியில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.மேலும், நுாறு ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் ஒன்றரை மணி நேரம் வரிசையில் சென்று மூலவரை தரிசித்தனர்.
நேற்று கொளுத்தும் வெயிலும் பக்தர்கள் தொடர்ந்து வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். மலைப்பாதையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் கோவில் நிர்வாகம் கார், வேன் மற்றும் பேருந்துகளுக்கு காலை, 8:00 மணி முதல் மாலை, 6:30 மணி வரை மூலம் மலைக்கோவிலுக்கு செல்வதற்கு தடைவிதித்து நீதிமன்ற வளாகம் பின்புறத்தில் நிறுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டன. திருத்தணி போலீசார், 50க்கும் மேற்பட்டோர் மலைப்பாதை மற்றும் மலைக்கோவில் வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பக்தர்கள் வசதிக்காக, கோவில் நிர்வாகம் அரசு பேருந்து ஒன்று உள்பட மூன்று பேருந்துகள் ரயில் நிலையம் மற்றும் தணிகை இல்லத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு இயக்கப்பட்டது.

கொளுத்தும் வெயிலில் பக்தர்களுக்கு குடிநீர் க்யூ லைன் மற்றும் சிறப்பு தரிசன வழியிலும் வழங்கப்பட்டன.

Advertisement