'தினமலர்' பட்டம் வினாடி -- வினா போட்டியில் 2வது இடம் பிடித்த மாணவியருக்கு பரிசு வழங்கல்

திருத்தணி:திருத்தணி சுதந்திரா மேல்நிலைப் பள்ளியின், 49வது ஆண்டு விழா, பள்ளி வளாகத்தில் நடந்தது.
பள்ளி தாளாளர் சியாமளா ரங்கநாதன் தலைமை வகித்தார். பள்ளியின் தலைவர் பேராசிரியர் ரங்கநாதன் வரவேற்று பேசினார். முதல்வர் துரைகுப்பன் ஆண்டறிக்கை வாசித்தார்.
இதில், சிறப்பு விருந்தினர்களாக புலவர் சண்முகவடிவேல், திருத்தணி மூத்த வழக்கறிஞர் சந்தியாராணி ஆகியோர் பங்கேற்று, பள்ளி தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றுகள் வழங்கி பாராட்டினர்.
மேலும், விழாவில், 'தினமலர்' பட்டம் இதழ் சார்பில், சென்னையில் நடந்த வினாடி - வினா இறுதி போட்டியில், மாநில அளவில் இரண்டாம் பரிசு பெற்ற சுதந்திரா பள்ளி மாணவியர் சான்வி, ரிஷிதபிரியா ஆகியோருக்கு, தலா, 5,000 ரூபாய் ரொக்கம் மற்றும், 'தினமலர்' சார்பில் வழங்கிய 'லேப்டாப்' வழங்கி, சிறப்பு விருந்தினர்கள் பாராட்டினர்.
இதுதவிர கடந்தாண்டு பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் கணித பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற மாணவர் சப்யூல்ரஹீம், பிளஸ் 2 தேர்வில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப் பிரிவில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்த மாணவி ஷாலினி ஆகியோருக்கு, தலா, 2,500 ரூபாய் மற்றும் பதக்கம் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து மாணவ - மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், பெற்றோர், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். பள்ளி துணை முதல்வர் கேசவன் நன்றி கூறினார்.
மேலும்
-
உக்ரைன் - ரஷ்யா போரில் இறந்த மகன் நினைவாக கோவில் கட்டிய பெற்றோர்
-
கர்நாடக கவர்னர் - அரசு இடையே நாளுக்கு நாள் முற்றுகிறது மோதல்
-
'சக்தி' திட்டத்தில் இதுவரை 397 கோடி பெண்கள் பயணம்
-
குடிநீரை வீணாக்கிய 112 பேர் ரூ.5.60 லட்சம் அபராதம் வசூல்
-
சைலன்சரில் இருந்து தீயை கக்கிய சொகுசு கார் பறிமுதல்
-
சிவகுமார் நாளை டில்லி பயணம்