மப்பேடு சமுதாய கூடம் கட்டுமான பணி கிடப்பில்

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம். மப்பேடு ஊராட்சியில், சமுதாயக்கூடம் இல்லாததால், தனியார் மண்டபங்களை பகுதிவாசிகள் நாடிச் செல்லும் நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, அப்போதைய திருவள்ளூர் அ.தி.மு.க., - எம்.பி., வேணுகோபால் தொகுதி மேம்பாடு நிதி ஒதுக்கீடு, மற்றும் அரசு, தனியார் நிறுவனம் பங்களிப்புடன் 1.60 கோடி ரூபாய் மதிப்பில், சமுதாயக்கூடம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, சிவன் கோவில் அருகே, 2019ம் ஆண்டு, பிப்ரவரி மாதம், வட்டார வளர்ச்சி அலுவலர்களால், பூஜை போடப்பட்டது.
பின், மண் பரிசோதனை முடிவுகள் அடிப்படையில் கால்நடை மருத்துவமனை அருகே மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு, 2020ல் ஆண்டு பணிகள் துவங்கின
பணிகள் துவங்கி ஐந்து ஆண்டுகளாகியும் சமுதாய மந்தகதியில் நடந்து வந்த பணிகள் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதற்கு, கடம்பத்துார் ஒன்றிய அதிகாரிகள் அலட்சியமே காரணம் என, பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, மப்பேடு ஊராட்சியில், கலெக்டர் ஆய்வு செய்து சமுதாயக்கூடம் அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
உக்ரைன் - ரஷ்யா போரில் இறந்த மகன் நினைவாக கோவில் கட்டிய பெற்றோர்
-
கர்நாடக கவர்னர் - அரசு இடையே நாளுக்கு நாள் முற்றுகிறது மோதல்
-
'சக்தி' திட்டத்தில் இதுவரை 397 கோடி பெண்கள் பயணம்
-
குடிநீரை வீணாக்கிய 112 பேர் ரூ.5.60 லட்சம் அபராதம் வசூல்
-
சைலன்சரில் இருந்து தீயை கக்கிய சொகுசு கார் பறிமுதல்
-
சிவகுமார் நாளை டில்லி பயணம்