ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாட தி.மு.க., செயற்குழுவில் முடிவு

சேலம்: தி.மு.க.,வின், சேலம் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் சேலத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. அவைத்-தலைவர் தங்கமுத்து தலைமை வகித்தார்.

மேற்கு மாவட்ட செயலர் செல்வகணபதி முன்னிலை வகித்து பேசினார். அதில் மார்ச், 1ல் முதல்வர் ஸ்டாலினின், 72வது பிறந்த நாளை சிறப்-பாக கொண்டாடுதல்; இடைப்பாடி, மேட்டூர், சங்ககிரி தொகுதி-களில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகா-தார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தல்; அனைத்து பகுதியினரும் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்குதல் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயலர் சுந்தரம், பொருளாளர் பொன்னு-சாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் ராமநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கிழக்கு மாவட்டம்அதேபோல் வாழப்பாடியில் உள்ள, சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில், மாவட்ட அவைத்த-லைவர் கருணாநிதி தலைமையில் செயற்குழு கூட்டம் நடந்தது. சேலம் கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம் பேசினார். அதில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள் வழங்கி விமரிசையாக
கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

Advertisement