சிட்டி கிரைம் செய்திகள்

நகை திருட்டு பணிபெண் மீது வழக்கு



கோவை தடாகத்தை சேர்ந்தவர் மணிமேகலை, 58. இவர் வீட்டில் பாரதி என்பவர் பணிபுரிந்து வந்தார். கடந்த சில தினங்களாக மணிமேகலை வீட்டில் தங்கம், வெள்ளி பொருட்கள் மாயமாகி வந்தன.

இதையடுத்து வீட்டில் கண்காணிப்பு கேமிராவை மணிமேகலை பொருத்தினார். கடந்த, 9 ம் தேதி பணிபெண் பாரதி மணிமேகலை வீட்டின் பீரோவில் இருந்து மூன்று பவுன் நகைகளை திருடிச் சென்றுள்ளார். இது கண்காணிப்பு கேமிராவில் பதிவானது. இதைப்பார்த்த மணிமேகலை கவுண்டம்பாளையம் போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார் விசாரிக்கின்றனர்.

கல்லூரி மாணவர்கள் மூவர் கைது



பொள்ளாச்சி, ஜமீன் ஊத்துக்குளி பகுதியை சேர்ந்தவர் தேவதர்ஷன், 24. இவர் கோவை, கோவில்பாளையம் போலீஸ் எல்லைக்குட்பட்ட விளாங்குறிச்சி பகுதியில் அப்பார்ட்மென்டில், வாடகை வீட்டில் தங்கி இருந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த 17ம் தேதி ஆறு பேர் கும்பல் தேவதர்ஷன் வீட்டிற்குள் நுழைந்து கத்தியை காட்டி மிரட்டி வீட்டில் இருந்த இரண்டு லேப்டாப், நான்கு மொபைல்கள் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது. இது தொடர்பாககோவை சரவணம்பட்டி போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மோகன்தாஸ், 20, கவுதம், 19, சுஜின்,24 ஆகிய மூன்று கல்லூரி மாணவர்களை கைது செய்தனர்,

Advertisement