ஊராட்சிகளில் அதிகரிக்கும் பிளாஸ்டிக் பயன்பாடு
ராஜபாளையம் : ராஜபாளையம் ஊராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள், ஒருமுறை உபயோகித்து எறியப்படும் பிளாஸ்டிக் கப்புகள் இருந்தும் கட்டுப்பாடு இல்லாததால் புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நகர் பகுதியில் உள்ள ராஜபாளையம் சுற்றியுள்ள ஊராட்சி கிராம பகுதிகளில் செயல்படும் ஹோட்டல்கள், தள்ளுவண்டி கடைகள், டீ, இறைச்சி, பூக்கடைகள் என அனைத்து பகுதிகளிலும் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தாராளமாக புழக்கத்தில் உள்ளது. தொடக்கத்தில் ஓரளவு கட்டுப்பாட்டில் இருந்த இவ்வகை பயன்பாடு நாளடைவில் கண்டுகொள்ளப்படாததால் மக்களும் பொருட்களை வாங்க கை வீசியபடி வந்து கேரி பைகளில் வாங்கி பயன்படுத்திவிட்டு சாலையோரங்களில் துாக்கி எறியப்படுகிறது.
இத்தகைய கண்காணிப்பாற்ற செயல்பாடுகளால் குடியிருப்புகள், வெளியிடங்கள், முள் செடிகள் என சுற்றிலும் பிளாஸ்டிக் குப்பைகளின் குவியலே காணப்படுகிறது. ஆரம்பத்தில் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்த போது உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் வாழை இலை உபயோகம், பொருட்கள் வாங்க வருபவர்கள் துணி பை கொண்டு வருவது என மாற்றத்தை காண முடிந்தது.
இதுகுறித்து சரவணன் கூறியதாவது; தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை கெடுபிடியின் போது பதுக்கி வைத்து விற்ற நிலை மாறி அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் இவற்றை விற்கும் மொத்த, சில்லறை விற்பனை கடைகளிலும் வெளிப்படையாகவே வைத்து விற்க தொடங்கியுள்ளனர். கால்நடைகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் எமனாக உள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கினை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.
மேலும்
-
சிதம்பரத்தில் பிப்.26ல் நாட்டியாஞ்சலி துவக்கம்
-
பட்டப்பகலில் கிராமத்தில் புகுந்து கன்று குட்டியை கொன்ற யானை
-
3500 பணியிடங்கள் காலி கிராம செவிலியர்கள் அவதி
-
இந்தியாவுக்கு நிதி தேவையில்லை அமெரிக்க அதிபர் மீண்டும் பேச்சு
-
ஹிந்தி மட்டும் தான் தெரியுமாம்; திருச்சி விமான நிலையத்தில் 'அடாவடி'
-
முதல்வர் மருந்தகங்களில் 762 மருந்துகள் விற்க முடிவு