திருப்புத்துாரில் மீன்பிடி திருவிழா

திருப்புத்தூர் திருப்புத்தூர் ஒன்றியம் சந்திரன்பட்டி சிறுகுடி கண்மாய், அம்மாபட்டி கண்மாய்களிலும் நீர் வற்ற துவங்கியதால், மீன்பிடித் திருவிழா நடந்தது. கோடை துவங்கிய நிலையில் கிராமங்களில் மீன்பிடி விழாவும் துவங்கியுள்ளது.

திருப்புத்தூர் வட்டாரத்தில் கோடைகாலம் துவங்கியுள்ளதை அடுத்து கண்மாய்களில் நீர் வற்றத் துவங்கியுள்ளதை அடுத்து மீன்கள் உயிர் வாழ முடியாது என்று கண்மாய்களில் அழி கண்மாய் எனப்படும் மீன் பிடித்திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் சேவினிப்பட்டியில் நடந்தது.

நேற்று சந்திரன்பட்டி, அம்மாபட்டி கண்மாய்களில் கிராமத்தினர் கூடி மீன் பிடித்தனர். முன்னதாக கிராம தெய்வங்களை வழிபட்டு, மீன் பிடிக்கும் போது யாருக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது.

அடுத்து மழையில் கண்மாய் பெருக வேண்டும் என்று வேண்டினர். பின்னர் கண்மாய்களில் இறங்கி கிராமத்தினர் வலை, பரி, கச்சா ஆகிய உபகரணங்களை கொண்டு கண்மாய்களில் இறங்கி மீன்களைப் பிடித்தனர். சந்திரன்பட்டி, அம்மாபட்டி கண்மாய்களில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று நாட்டு மீன்களான கெண்டை, கெளுத்தி, ஜிலேபி, குரவை உள்ளிட்ட மீன்களை அள்ளி சென்றனர்.

Advertisement