மும்மொழி கொள்கையை தி.மு.க., அரசு ஏற்க மறுத்தால் மக்கள் பாடம் புகட்டுவர்: ஜி.கே நாகராஜ் பேச்சு

கோவை: தமிழக பா.ஜ., சார்பில் பொதுமக்களுக்கு மத்திய அரசின் பட்ஜெட் நன்மைகளை விளக்கும் வகையில் கோவை வடக்கு மாவட்டத் தலைவர் கரு. மாரிமுத்து தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் சிறப்பு பேச்சாளராகக் கலந்துகொண்டார்.



விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே..நாகராஜ் பேசியதாவது:
மத்திய அரசு கல்விக்கு பட்ஜெட்டில் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மேம்பட வேண்டும். உலகத்தரத்திற்கு இணையாக அரசுப்பள்ளிகளின் கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும்.


அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களும் உலகத்தரத்திற்கு இணையான கல்வியைப்பெற வேண்டுமென்ற நோக்கத்தோடு மும்மொழிக்கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஐந்தாம் வகுப்பு வரை கட்டாயத்தமிழ் வழியில் அனைத்து பாடங்களையும் கற்க வேண்டும்.


ஆங்கிலம் மொழிப்பாடமாக இருக்கும். மூன்றாவது மொழியாக தாங்கள் விரும்பும் ஒரு மொழியை மாணவ, மாணவிகள் கற்றுக்கொள்ளலாம்.ஆனால் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும்.
எங்கும் ஹிந்தி,சமஸ்கிருதம் திணிக்கப்படுவதில்லை. மூன்றாவது மொழி மட்டுமின்றி அரசுப்பள்ளிகளின் கட்டமைப்பிற்கு பல்லாயிரம் கோடி நிதிகளை வழங்குகிறது மத்திய அரசு.


மும்மொழிக்கொள்கையை தி.மு.க., அரசு ஏற்க மறுத்தால் வரும் 2026ல் திமுக அரசுக்கு சரியான பாடம் புகட்டுவர் தமிழக மக்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement