ரூ.70 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் கைது!

11

மதுரை: மதுரை அருகே ரூ.70,000 லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் கைது செய்யப்பட்டு உள்ளார்.



இதுபற்றிய விவரம் வருமாறு;


மதுரை மாவட்டம், திருமங்கலம் ஜவஹர் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார். சாப்ட்வேர் பொறியாளர். கிழவநேரியில் 3.18 ஏக்கர் நிலத்தை வாங்கினார்.
நிலத்தை பதிவு செய்ய திருமங்கலம் பத்திரப்பதிவு அலுவலகம் சார் பதிவாளர் (பொறுப்பு) பாண்டியராஜனை 47, அணுகினார்.

நிலத்திற்கான மூலப்பத்திரம் காணாமல் போனதாக தேனி தென்கரை ஸ்டேஷனில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் அதன் உண்மை தன்மை குறித்து விசாரிக்காமல் இருக்க ரூ.1 லட்சத்தை லஞ்சமாக அவர் கேட்டதாக தெரிகிறது.


ஆனால் கேட்ட லஞ்ச பணத்தை செந்தில்குமார் தர மறுத்தார். காணாமல் போனது உண்மைதான் என போலீசார் உறுதி அளித்த போதிலும் ரூ.1 லட்சம் தந்தால்தான் பத்திரப்பதிவு செய்து தருவேன் என்றார்.


பிறகு பேச்சுவார்த்தை நடத்தி ரூ.70 ஆயிரம் தருமாறு கேட்டார். அந்த தொகையை பத்திர எழுத்தர் பாலமணிகண்டனின் 40, வங்கி கணக்கில் செலுத்துமாறு கூறினார். அதன்படி செந்தில்குமார் செலுத்தினார். இது குறித்து தகவல் அறிந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், பாண்டியராஜன், பாலமணிகண்டன் ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement