கால்பந்து: இந்தியா தோல்வி

சார்ஜா: 'பிங்க் லேடீஸ்' கோப்பை கால்பந்து போட்டியில் இந்திய பெண்கள் அணி 0-2 என, ரஷ்யாவிடம் தோல்வியடைந்தது.
ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,), பெண்களுக்கான 'பிங்க் லேடீஸ்' கோப்பை கால்பந்து 2வது சீசன் நடக்கிறது. இந்தியா, தென் கொரியா, தாய்லாந்து, உஸ்பெகிஸ்தான், ஜோர்டான், ரஷ்யா என 6 அணிகள் பங்கேற்கின்றன.
முதல் போட்டியில் வென்ற இந்திய அணி, இரண்டாவது போட்டியில் உலகத் தரவரிசையில் 27 வது இடத்திலுள்ள ரஷ்யாவை எதிர்கொண்டது.
போட்டியின் 25வது நிமிடத்தில் ரஷ்யாவின் கிளாபிரா முதல் கோல் அடித்தார். அடுத்து போட்டியின் கடைசி ஸ்டாப்பேஜ் நேரத்தில் (92வது) வேலன்டினா ஒரு கோல் அடித்தார். முடிவில் இந்திய அணி 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.
நாளை தனது மூன்றாவது போட்டியில் இந்திய அணி தென் கொரியாவை சந்திக்க உளளது.

Advertisement