ரசிகர்களை கடத்த திட்டம் * பாக்., உளவுப் பிரிவு எச்சரிக்கை

கராச்சி: ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி 9வது சீசன், பாகிஸ்தானில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடக்கின்றன.

பாகிஸ்தானில் போட்டிகளை காண வந்துள்ள வெளிநாட்டு ரசிகர்களை கடத்த, சில பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக, பாகிஸ்தான் உளவு பிரிவு எச்சரித்துள்ளது. இதையடுத்து வீரர்கள், போட்டி நடக்கும் மைதானங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Advertisement