கஞ்சா விற்ற 7 பேர் கைது 22.50 கிலோ பறிமுதல்

தாம்பரம், தாம்பரம் போலீஸ் கமிஷனரக எல்லையில், போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்கும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, கண்ணகி நகர், சுனாமி குடியிருப்பு அருகே, நேற்று முன்தினம், கண்ணகி நகர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி, பெரும்பாக்கத்தை சேர்ந்த நிவேதிதா முசல், 27, உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அந்த கும்பல், ஒடிசா மாநிலத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து, கண்ணகி நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், கூலி தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதேபோல், பள்ளிக்கரணை, காமகோடி நகர் பேருந்து நிலையம் அருகே, பள்ளிக்கரணை மதுவிலக்குபோலீசார் நடத்திய சோதனையில், அயனாவரத்தை சேர்ந்த புஹாரி, 23, பொன்னியம்மன் மேட்டு 10வது தெருவை சேர்ந்த தட்சிணாமூர்த்தி, 20, ஒக்கியம்துரைபாக்கத்தைச் சேர்ந்த பிரகாஷ்ராஜ், 27, உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து, 8.50 கிலோ கஞ்சா பறிமுதல்செய்யப்பட்டது. அவர்கள், டார்ஜிலிங்கில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது.