இன்று இனிதாக (25 .02.2025)

ஆன்மிகம்

திருநட்சத்திர விழா

 ஆளவந்தார் திருநட்சத்திர விழா, மாலை 6:45 மணி. திருநடைக்காப்பு, இரவு 9:00 மணி. இடம்: பார்த்தசாரதி பெருமாள் கோவில், திருவல்லிக்கேணி.

பிரதோஷ வழிபாடு

 பிரதோஷம் முன்னிட்டு, நந்தியம் பெருமான், பிரதோஷ நாயகருக்கு அபிஷேகம், மாலை 4:30 மணி. இடம்: கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர்.

பிரம்மோற்சவ விழா

 பிரம்மோற்சவத்தில் சக்ர ஸ்நானம், காலை 9:00 மணி. கொடியிறக்கம், இரவு 7:00 மணி. இடம்: பத்மாவதி தாயார் கோவில், தி.நகர்.

 பிரம்மோற்சவ வெண்ணைய் தாழி கண்ணன் திருக்கோலம், காலை 7:00 மணி, குதிரை வாகனம், இரவு 8:00 மணி. இடம்: சத்ய நாராயணப் பெருமாள் கோவில், ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் அருகில், நங்கநல்லுார்.

உபன்யாசம்

 சுந்தர்குமாரின் சம்பூர்ண வால்மீகி ராமாயண, 100 நாள் உபன்யாசம், மாலை 6:30 மணி. இடம்: ஆஸ்திக சமாஜம், வீனஸ் காலனி, ஆழ்வார்பேட்டை.

 ஸ்ரீமத் பாகவத தசம ஸ்கந்த சங்கீத உபன்யாசம், நிகழ்த்துபவர்: ஸ்ரீவத்ஸ் கிருஷ்ணா, இரவு 7:00 மணி. இடம்: அயோத்யா மண்டபம், மேற்கு மாம்பலம்.

ஓம் கந்தாஸ்ரமம்

 சகஸ்ர லிங்கத்திற்கு பிரதோஷ அபிஷேகம், மாலை 5:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.

கோவில்களில் பூஜை

 பிரதோஷ அபிஷேகம், மாலை 4:30 மணி, சுவாமி உள்புறப்பாடு, மாலை 6:30 மணி. இடம்: ஆதிபுரீஸ்வரர் கோவில், பள்ளிக்கரணை.

 துர்க்கை அம்மனுக்கு, ராகு கால பூஜை, மாலை 3:00 மணி. இடம்: துர்க்கை அம்மன் கோவில், ஒயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை.

 ராகு கால அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, மாலை 3:00 மணி முதல். இடம்: கங்கை அம்மன் கோவில், ஊத்துக்குளக்கரை, ஜல்லடியன்பேட்டை.

பொது

மனித சங்கிலி விழிப்புணர்வு

 போதை ஒழிப்பு மன்றம் சார்பில், குன்றத்துார் அரசு கலை கல்லுாரி மாணவர்கள், போதை ஒழிப்பு மனித சங்கிலி விழிப்புணர்வு, காலை 10:30 மணி. இடம்: நான்கு சாலை சந்திப்பு, குன்றத்துார்.

இசை நிகழ்ச்சி

 ஸ்ரீ பாலசுப்ரமண்ய சுவாமி சத் சங்கம் சார்பில், திருப்புகழ் 108 மணிமாலை இசை நிகழ்ச்சி, மாலை 6:30 மணி, இடம்: அருணகிரி நாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை.

Advertisement