செஸ்: ஹரிகா 'டிரா'

புதுடில்லி: மொனாகோ ஓபன் செஸ் தொடரின் ஆறாவது சுற்றில் இந்தியாவின் ஹரிகா 'டிரா' செய்தார்.
மொனாக்கோவில், பெண்களுக்கான கிராண்ட் பிரிக்ஸ் செஸ் தொடர் நடக்கிறது. இந்தியாவின் கொனேரு ஹம்பி, ஹரிகா உட்பட மொத்தம் 10 வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இதன் ஆறாவது சுற்றில் ஹரிகா துரோணவள்ளி, ஜெர்மனியின் எலிசபெத்தை சந்தித்தார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய ஹரிகா, போட்டியின் 40 வது நகர்த்தலில் 'டிரா' செய்தார்.
மற்றொரு போட்டியில் ஹம்பி, ரஷ்யாவின் அலெக்சாண்ட்ராவை எதிர்கொண்டார். கருப்பு நிற காய்களுடன் ஹம்பி விளையாடினார். துவக்கத்தில் இருந்தே பின்தங்கிய ஹம்பி, 62 வது நகர்த்தலில் தோல்வியடைந்தார்.
இதுவரை நடந்த ஆறு சுற்றுகளின் முடிவில் ரஷ்யாவின் கேத்ரினா லாக்னோ 4.0 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். மங்கோலியாவின் பட்குயாக் (3.5), அலெக்சாண்ட்ரா (3.5) அடுத்த இரு இடத்தில் உள்ளனர். ஹம்பி (3.0) ஆறாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். ஹரிகா (2.0) கடைசி இடத்தில் (10) உள்ளார்.