நிடி ஆயோக் விருது விருதுநகர் தேர்வு

விருதுநகர்:மத்திய அரசின் நிடி ஆயோக் வாயிலாக, 2018ல் நாட்டில் முன்னேற துடிக்கும் மாவட்ட திட்டம் துவங்கப்பட்டது. இதில், தமிழகத்தில் இருந்து விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்கள் இடம்பெற்றன.

இம்மாவட்டங்களில், சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்புகளை மேம்படுத்த 49 காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதன் முன்னேற்றம் குறித்த விபரங்கள், ஒவ்வொரு மாதமும், 'சாம்பியன்ஸ் ஆப் சேன்ஞ்' என்ற 'டாஸ்போர்டில்' பதிவேற்றம் செய்து, அதன் அடிப்படையில் மத்திய அரசின் நிடி ஆயோக் அமைப்பு, மாதத்தின் இறுதியில் தரவரிசை வெளியிடுகிறது.

அந்த வகையில், இந்த பட்டியலில் உள்ள விருதுநகர் மாவட்டம், சுகாதாரம், ஊட்டச்சத்தில் இந்திய அளவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து சாதனை படைத்துள்ளது. இதற்காக, 3 கோடி ரூபாய்க்கான விருதுக்கு தேர்வு பெற்றுள்ளது.

Advertisement