4 அடி உயர்ந்த ஆஞ்சநேயர் கோவில்

சிங்கபெருமாள் கோவில், சிங்கபெருமாள் கோவில் - அனுமந்தபுரம் சாலையில், பல்லவர் கால பழமையான பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது.
இக்கோவிலுக்கு நேர் எதிரே தேரடி அருகில், 1,000 ஆண்டுகள் பழமையான ஆஞ்சநேயருக்கு தனி சன்னதி உள்ளது.
இக்கோவில்கள் ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இக்கோவிலை சுற்றி குடியிருப்புகள் மற்றும் சாலைகளின் தரை மட்டம் உயர்ந்ததால், ஆஞ்சநேயர் சன்னதி சாலையை விட 3 அடி ஆழத்தில் இருந்து வந்தது.
இதன் காரணமாக, மழைக்காலங்களில் கோவிலுக்குள் மழைநீர் மற்றும் கழிவுநீர் புகுவது வாடிக்கையாக இருந்து வந்தது. இதையடுத்து, சிங்கபெருமாள் கோவில் சன்னதி தெரு பக்தர்கள் இணைந்து, கோவிலை 4 அடி உயர்த்த, தமிழக அரசிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தனர்.
கடந்த டிச., மாதம் கோவிலை உயர்த்த அனுமதி வழங்கப்பட்டது. தொடர்ந்து, கோவிலை உயர்த்தும் பணிகள் துவங்கப்பட்டு, வேகமாக நடைபெற்று வருகின்றன.
சன்னதி தெரு பக்தர்கள் கூறியதாவது:
இந்த கோவில் கட்டுமானம் முழுதும் கருங்கற்கள் கொண்டு கட்டப்பட்டு உள்ளது. அதன் கட்டுமானம் மாறாமல் இருக்க, அடித்தளத்தின் கீழே தனியாக கருங்கற்களால் ஆன படுகை போன்று அமைத்து, ஒவ்வொரு அங்குலமாக 200 இரும்பு 'ஜாக்கி'கள் கொண்டு, கோவில் 4 அடி உயரம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது.
இன்னும் 10 நாட்களில் இந்த பணிகள் நிறைவடையும். அதைத் தொடர்ந்து, முன் மண்டபம் சுற்றுச்சுவர் உள்ளிட்டவை கட்டப்பட்டு, மே மாதத்திற்குள் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
சிவராத்திரியை முன்னிட்டு 'சோம்நாத் மஹோத்சவம்'
-
கும்பமேளாவில் நடந்த சம்பவம் செல்போனில் கணவர் வீடியோ காலில் அழைத்த போது மனைவி செய்த செயல்
-
சீர்காழி இரட்டை கொலை வழக்கு கடலுாரை சேர்ந்த 4 பேருக்கு ஆயுள்
-
மாமியாரை கழுத்தை அறுத்து கொலை செய்தவர் கைது
-
கணவன், மனைவிக்கு 20 ஆண்டுகள் சிறை தேனி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
-
குழந்தைகள் மொழி உரிமையை தி.மு.க., பறிக்கக்கூடாது