மயான கொள்ளைகொடியேற்றத்துடன் துவக்கம்
மயான கொள்ளைகொடியேற்றத்துடன் துவக்கம்
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி, பழையபேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மயான கொள்ளை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, காலை, 10:30 மணிக்கு, ஹோமத்துடன் கொடிமரத்திற்கு பூஜை செய்து, கோவிலை சுற்றி வலம் வந்து, காப்புக் கட்டுதலுடன் கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து, முளைப்பாரி எடுத்தல், யாகசாலை பிரவேசம், அக்னிமுகம், மகா கணபதி ஹோமம், அஷ்ட திக்பாலகர் பூஜை ஆகியவை நடத்தி, அம்மனுக்கு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், இரவு, 7:00 மணிக்கு, பக்தி பாடல் நிகழ்ச்சியும் நடந்தது.
இன்று காலை, 8:00 மணிக்கு, மஹாசிவராத்திரியை முன்னிட்டு, சக்தி கரகம், பச்சை கரகம் எடுத்து கங்கையில் நீராடி விட்டு சன்னதி பிரவேசம் அடைகின்றனர். நாளை காலை, முகவெட்டு மயானத்திற்கு எடுத்துச் செல்லும் நிகழ்ச்சியும், 5:30 மணி முதல், பக்தர்கள் அலகு குத்திக்கொண்டு வேண்டுதல் நிறைவேற்ற உள்ளனர். மதியம், பூத வாகனத்தில் அம்மன் மயான கொள்ளைக்கு புறப்படும் நிகழ்ச்சியும், இரவு, அம்மன் திருத்தேர் நகர்வலமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், விழாக்குழுவினர் மற்றும் பருவதராஜகுல மீனவர் சமுதாயம் மற்றும் திருப்பணிக்குழுவினர் செய்துள்ளனர்.
மேலும்
-
சதுரங்க போட்டியில் மாணவர்கள் அபாரம்
-
'ஆன்லைனில்' போதை மாத்திரை: 3 பேர் கைது
-
கேரளாவுக்கு கடத்தப்படும் கனிம வளங்கள்; கருத்து கேட்பு கூட்டத்தில் குற்றச்சாட்டு
-
காலி பணியிடம் நிரப்ப மின் ஊழியர் போராட்டம்
-
பல்லாங்குழி சாலைக்கு விமோசனம்; பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு
-
இளைஞர் அணி செயலாளர் யார்? தி.மு.க.,வில் அடுத்த பரபரப்பு