மாணவர்கள் இயக்கங்களின்கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்



மாணவர்கள் இயக்கங்களின்கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

ஓசூர்:மும்மொழி கல்வி கொள்கை என்ற பெயரில், ஹிந்தியை திணித்து மீண்டும் மொழிப்போருக்கு நிர்பந்திக்கும் பா.ஜ., தலைமையிலான மத்திய அரசை கண்டித்து, தமிழ்நாடு மாணவர்கள் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஓசூர் ராம்நகரில் இருந்து, எம்.ஜி., ரோட்டில் உள்ள தபால் அலுவலகம் வரை நேற்று காலை ஊர்வலம் நடந்தது. தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., ஊர்வலத்தை துவக்கி வைத்தார். தபால் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. தி.மு.க., மேற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கண்ணன் தலைமை வகித்தார். தி.க., மாவட்ட மாணவரணி தலைவர் செந்தமிழ், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் ஸ்ரீஹரி, சமூக நீதி மனித உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில் பிரபாகரன், இளைஞர் காங்., மாவட்ட தலைவர் நதிமுல்லா, ம.ஜ.க., மாணவரணி தலைவர் சையது அகமது உட்பட பலர் கண்டன உரையாற்றினர். மாநகர மேயர் சத்யா, தி.மு.க., மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், பொருளாளர் சுகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் எல்லோராமணி, துணை மேயர் ஆனந்தய்யா, தி.க., மாவட்ட தலைவர் வனவேந்தன், வி.சி., கட்சி ஓசூர் மாநகர மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement