பாதயாத்திரை சென்ற 3 பேர் கார் மோதி பலி

ராமநத்தம்:கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த ஐவதுகுடியை சேர்ந்தவர் கார்த்திகேயன், 18, காசிவேல், 20, பாலு, 28. உறவினர்களான மூவரும் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு நேற்று காலை பாதயாத்திரை புறப்பட்டனர்.

மாலை, 4:00 மணியளவில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், ராமநத்தம் அடுத்த எழுத்துார் அருகே நடந்து சென்ற போது, அவர்கள் பின்னால் வேகமாக வந்த கார் திடீரென அவர்கள் மீது மோதியது.

இதில், பலத்த காயமடைந்த கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காசிவேல், பாலு பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு இருவரும் உயிரிழந்தனர். ராமநத்தம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement