திருவிழாவில் கூம்பு வடிவ ஒலிப்பான்கள்5 அடிக்கு மேல் அலகுகள் குத்த தடை
திருவிழாவில் கூம்பு வடிவ ஒலிப்பான்கள்5 அடிக்கு மேல் அலகுகள் குத்த தடை
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் சிவராத்திரி நாளில் அங்காளம்மன் மயான கொள்ளை திருவிழா நடக்கும். தற்போது, அங்காளம்மன் கோவில் கட்டப்பட்டு வருவதால், அங்காளம்மன் தேர் திருவிழா நடக்காது எனவும், பூங்காவனத்தம்மன் தேர் திருவிழா வழக்கம் போல் நடக்கும் எனவும், கோவில் நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.
அங்காளம்மன் திருவிழாவில், அலகு குத்துதல், சங்கிலி இழுத்தல், காளி வேடமணிதல் என பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவர். விழாவிற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து கோவில் அறங்காவலர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில், கிருஷ்ணகிரி டி.எஸ்.பி., முரளி பேசுகையில், ''அங்காளம்மன் திருவிழாவில், பக்தர்கள் மிக நீண்ட அலகுகள் குத்தி வர தடை விதிக்கப்படுகிறது. 5 அடிக்கு மேல், அலகு குத்தி வரக்கூடாது. அதேபோல், கூம்பு வடிவ ஒலிப்பான்கள் பயன்
படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. காளிவேடம் அணிந்து வருபவர்கள், கையில் கூர்மையான ஆயுதங்கள் இருக்கக்கூடாது. நகர் முழுவதும் 'சிசிடிவி' பொருத்தி போலீசார் கண்காணிப்பர். நகருக்குள் வரும், 27ல், வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அசம்பாவிதங்களை தடுக்கும் வண்ணம் எடுக்கும் முயற்சிகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,'' என்றார்.
காவேரிப்பட்டணம் இன்ஸ்பெக்டர் சரவணன், எஸ்.ஐ., சிவசந்தர் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
மேலும்
-
சதுரங்க போட்டியில் மாணவர்கள் அபாரம்
-
'ஆன்லைனில்' போதை மாத்திரை: 3 பேர் கைது
-
கேரளாவுக்கு கடத்தப்படும் கனிம வளங்கள்; கருத்து கேட்பு கூட்டத்தில் குற்றச்சாட்டு
-
காலி பணியிடம் நிரப்ப மின் ஊழியர் போராட்டம்
-
பல்லாங்குழி சாலைக்கு விமோசனம்; பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு
-
இளைஞர் அணி செயலாளர் யார்? தி.மு.க.,வில் அடுத்த பரபரப்பு